இளவரசர் ஹரியை பார்த்து கண்ணசைவில் மெர்க்கல் !

அனைவரும் எதிர்பார்த்த பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் திருமணம் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

திருமணம் நடந்து முடிந்த பின்னர், திருமணம் நடந்த விதம், ஹரியின் அம்மா டயானா, இவர்கள் அணிந்திருந்த ஆடை, பரிமாறப்பட்ட உணவுகள் என அனைத்தும் தற்போது விவாதப்பொருளாகியுள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்கள் இருவரும் பரிமாறிக்கொண்ட முத்தமும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. Channel Nine தொலைக்காட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் நேலையில் விவாதித்துள்ளதாவது, இவர்கள் முத்தமிட்டுக்கொண்டது சற்று தர்மசங்கடமான நிலையாக இருந்தது.

இவர்களை ஒப்பிடுகையில் ஹரியின் அண்ணன் வில்லியம் - கேட் தம்பதியினர் தங்கள் திருமணத்தின்போது முத்தமிட்டுக்கொண்டது மரியாதை நிதித்தமாக இருந்தது என விவாதித்துள்ளார்.

மேலும், திருமணம் முடிந்து தேவாலயத்தை விட்டு வெளியேவந்தவுடன், அரச குடும்பத்து புதுமணத்தம்பதிகள் இதுபோன்று முத்தம் கொடுப்பது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் இப்படி முத்தம் கொடுக்கும் புகைப்படம் அரச குடும்பத்து புகைப்படங்களில் முக்கிய இடம்பெறுகிறது.

ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விடயம், தேவாலயத்தை விட்டு வெளியே வந்தவுடன் மக்களை பார்த்து கையசைத்தவுடன், மேகன் மெர்க்கலே தாமக முன்வந்து நாம் முத்தமிட்டு கொள்ளாலாமா என ஹரியை பார்த்து கண்ணசைவில் கேட்கிறார். அதற்கு ஹரி சம்மதம் தெரிவிக்கிறார்.

இது ஒரு சரியான அணுகுமுறை என உதட்டுமொழி படிப்பவர் Tina Lannin கூறியுள்ளார். ஏனெனில் மக்கள் எதிர்பார்ப்பில் இருக்கையில் அதிக அழுத்தத்தை நம் மீது எடுத்துக்கொள்ளாமல் இவ்வாறு மெர்க்கல் கையாண்டது நல்ல அணுகுமுறை என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.