இத்தாலியில் இலங்கை இளைஞன் உயிரிழப்பு!

இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த
இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

கம்பஹாவைச் சேர்ந்த 24 வயதான சிந்தன தனஞ்சய என்ற இளைஞரே இவ்வாறு இத்தாலியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த வேளையில் அவர் பயணித்த ஸ்கூட்டர், பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்திலேயே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.