பிரபல நடிகை தீபானி சில்வா கைது!

பிரபல நடிகை தீபானி சில்வா பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று (28) அதிகாலை பண்டாரகம பகுதியில் வைத்து அவர் பயணித்த மோட்டார் வாகனம் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தை படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தீபானி சில்வாவை இன்று பானந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Powered by Blogger.