முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு விசாரணை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரி.பீ. ஏக்கநாயக்க சற்று முன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். 


இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆஜராகியுள்ளார். 

கடந்த 24 ஆம் திகதி முன்னாள் இராஜாங்க அமைச்சரை நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் பாராளுமன்ற அமர்வு இருந்தமை காரணமாக சமூகமளிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.