இரு பச்சை அனகோண்டாக்கள் இந்தியா பயணம்!

இலங்கையின் தேசிய மிருகக்காட்சி சாலையிலிருந்து இந்தியாவின் மைசூர் சமராஜேந்திர விலங்கியல் பூங்காவிற்கு இரு  பச்சை அனகோண்டாக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
 குறித்த ஊர்வனவற்றின் சுகாதார நிலைமைகள் நல்லமுறையில் உள்ளதாகவும், அவைகள் விலங்கியல் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திலுள்ளதாகவும் பூங்காவின் இயக்குநர் சி. ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
 குறித்த இரு அனகோண்டாக்களும், 6 முதல் 8 அடி நீளமும், 15 கிலோ எடை கொண்டது.
 இதேநேரம், மைசூர் விலங்கியல் பூங்காவிலிருந்து நான்கு அரியவகை மான்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளதாக பூங்காவின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 ஆறு ஆண்டுகளின் பின்னர் இந்த விலங்குப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.