உண்மையைச் சொன்ன "நடிகையர் திலகம்" !

நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை கொண்டு உருவாகியிருக்கும் 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படம் தமிழில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தலைமுறைகள் தாண்டியும் நடிகையர் திலகத்தை எல்லோரும் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 
இந்த நிலையில், நடிகை சாவித்திரியின் மகன் மற்றும் மகள், நடிகையர் திலகம் படம் குறித்து அவரது மகள் விஜய சாமூண்டீஸ்வரியும், மகன் ஸ்ரீராம நாராயண சதீஷ்குமாரும் பிரபல வெப்சை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தனர். அப்போது பேசிய ஸ்ரீராம நாராயண சதீஷ்குமார், படம் வெளியாகும் முன்பே மகா நடி ப்ரிவியூ பார்த்துவிட்டோம்., அம்மாவின் வாழ்க்கையை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. அம்மாவுக்கு இந்த தலைமுறையிலும் ஃபேன்ஸ் இருக்கிறதை நினைச்சு பெருமையா இருக்கு. அம்மாவின் கடைசி நாட்களில் பக்கத்தில் இருந்தவன் நான். அம்மாவின் கடைசி நாட்களில் எல்லோரும் நினைப்பதுபோல், அவர்கள் தனியாக இல்லை. உண்மையில் என்ன நடந்ததோ அதை மட்டுமே படத்தில் காட்டியிருக்காங்க என்று கூறினார்.
சாவித்திரியின் மகள் விஜய சாமூண்டீஸ்வரி கூறும்போது, அம்மாவை அப்பா அம்மாடிதான் என்று கூப்பிடுவார். அதை படத்திலும் காட்டியிருக்காங்க. அப்பாவை கண்ணா என்றுதான் அம்மா கூப்பிடுவாங்க. என்னையும் தம்பியையும் விஜிக்குட்டி, கண்ணு அப்படின்னு கூப்பிடுவாங்களே தவிர, முழு பெயர் சொல்லி கூப்பிட்டதே இல்லை. 
அம்மாவுக்கு மழையில் விளையாட ரொம்ப பிடிக்கும். தூறல் ஆரம்பிச்சுட்டாலே, எங்களை வீட்டில் இருந்து லாபினுக்கு கூப்பிட்டு வந்துடுவாங்க. குளிரால் உடம்பு நடுங்கும் வரை மழையில் குதிச்சு குதிச்சு விளையாடுவோ. மான்குட்டி, புலிக்குட்டி எல்லாம் வளத்திருக்கோம். மான் சாது மிருகம்னாலும் துள்ளிக்குதிக்கும் விலங்கு இல்லையா மான் வளர்க்கக் கூடாது என்று சொல்லிட்டார்.  
புதுக்கோட்டை மகாராஜா வீட்டுக்குப் போயிருந்தப்போ அங்கிருந்து புலிக்குட்டிகளை வாங்கி வந்தோம். அன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்கு வந்த அப்பா, இது காட்டு விலங்கு என்று சொல்லி, மிருககாட்சி சாலையில் ஒப்படைச்சுட்டார். அன்னைக்கு நானும் அம்மாவும் ரொம்ப நேரம் அழுதுகிட்டு இருந்தோம்.
ஒவ்வொரு கிறிஸ்துமஸ் அன்னைக்கும், அம்மா எங்களை ஸ்பென்சர் பிளாசா கூட்டிட்டுப் போவாங்க. அங்கே இருக்கும்சாண்டா கிளாசைப் பார்க்கத்தான். அம்மா கடைசி காலத்துல யாரும் இல்லாமல் இறந்தாங்கன்னுதான் எல்லோரும் நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஆனால், இந்த படம் மூலம் அப்படி இற்க்கவில்லை... அம்மாவை அப்பா கைவிடலைன்னு உலகத்துக்கு சொல்ல முடிஞ்சிருக்கு. உண்மையைச் சொன்னா படத்துக்கு நன்றி. இதுபோதும் எனக்கு என் தம்பிக்கும் என்று சாமூண்டீஸ்வரி கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.