நடமாடும் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டது!

புத்தள, ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 122ம் கட்டை அருகிலிருந்து சடலம் ஒன்றை நடமாடும் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸார்  ,இன்று காலை மீட்டுள்ளனர்.
ஒக்கம்பிட்டிய பகுதியை சேர்ந்த 43 வயதுடைய சமன் அநுரகுமார என்பவரது சடலமே அது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் கப் வாகனத்தில் விருந்துபசாரம் ஒன்றிற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் சந்தர்ப்பத்தில் உயிரிழந்தார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒக்கம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.