வவுனியாவில் பனை வளத்தை காப்போம்: விழிப்புணர்வு நிகழ்வில் இளைஞர்கள்!

பனைவளத்தை காப்போம் என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றினை வவுனியா சுயாதீன இளைஞர் அமைப்பு முன்னெடுத்துள்ளது.

இன்று காலை வவுனியாஇ நெளுக்குளம் பிள்ளையார் ஆலயம் அருகில் உள்ள பனந்தோப்பு பகுதியில் இவ்விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்களின் அடையாளமாக விளங்குகின்ற பனை வளம் அழிக்கப்பட்டு வருவதால் நீர்பற்றாக்குறை ஏற்பட்டு வரட்சி நிலை ஏற்பட்டு வருகின்றது. அதை நம்பிய குடும்பங்களின் சுயசார்ப்பு பொருளாதார கட்டமைப்பும் சீர்குலைந்துள்ளது. இதனால் பனைவளத்தை காத்து எமது இருப்பை பாதுகாப்போம் எனத்தெரிவித்தே இளைஞர்கள் இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்தொடர்ச்சியாக வடக்கு இளைஞர்கள் பலர் ஒன்று கூடி மாலை மன்னார்இ உயிலங்குளம் பகுதியில் நுங்குத்திருவிழா என்னும் பெயரில் பனைசார் உற்பத்திப் பொருட்கள்இ பனம்பொருட்களுடன் விழ்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
ப.துசிPowered by Blogger.