நன்னீர் மீன்வளர்ப்பு திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை!

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் குளங்களை அண்டிய பகுதிகளில் நன்னீர் மீன் வளர்ப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டமொன்றை நீரியியல் வள அபிவிருத்தி அதிகார சபை தற்போது ஆரம்பித்துள்ளது.

இதன்கீழ் செவனகல மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள உடவலவ, ஊருசிட்டாவாவ, சந்திரிகா குளம் உள்ளிட்ட குளங்களில் இதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இவற்றில் சுமார் ஒன்பது இலட்சம் மீன்குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்காக அரசாங்கம் ஒருகோடி 60 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
Powered by Blogger.