யாழ்ப்பாணம் வந்தார் ரணில்- அதிகாரிகளுடன் சந்திப்பு!

யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி நிலமைகளை ஆராய்வதற்காக தலைமை
அமைச்சர் ரணில் விக்ரம சிங்க சற்று முன்னர் யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
வானூர்தியில் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் வந்திறங்கயி அவர் பலத்த பாதுகாப்புடன் இராணுவ அதிகாரிகளால் படைத் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என அறியமுடிகிறது.
அதிகாரிகளுடனான கலந்துரையாடல் எங்கு நடைபெறும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் ரணிலைச் சந்திக்கவுள்ளனர் என்று கூறப்படுகிறது.
Powered by Blogger.