.நடுவீதியில் வீசப்பட்ட முதியவர் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்!

காரைதீவில் இனந்தெரியாத நபர்களால் நடுவீதியில் விட்டுச் செல்லப்பட்ட வயோதிபர் புத்தளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த வயோதிபரின் பெயர் தெய்வநாயகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயோதிபரை அவரது அண்ணனின் மகன் மருத்துவமனையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக தனது பொறுப்பில் அழைத்துச் சென்றுள்ளார்.

மட்டக்களப்பு – தாழங்குடாவை சேர்ந்த அண்ணனின் மகன் ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்தே தனது சித்தப்பாவை இனங்காண முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவரது மகன் கட்டாரில் இருக்கிறார். அவர் ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்து எமக்கு அறிவித்ததையடுத்தே நான் இங்கு வந்தேன். தெய்வநாயகம் திராய்க்கேணியில் பிறந்தவர்.

மனரீதியாக பாதிக்கப்பட்ட அவர் புத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் தானாகவே சுமார் 20மைல் தூரம் வரையில் நடந்து சென்று விடுவார். இவ்வாறு தான் அவர் இங்கு வந்திருக்க கூடும். உண்மையில் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்து என்பது பற்றித் தெரியாது.

எனினும் நடுத்தெருவில் கிடந்த எனது சித்தப்பாவை பாதுகாப்பாக வைத்தியசாலையில் சேர்த்த காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கும், வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
Powered by Blogger.