அக்காவும் தம்பியும் செய்த மோசமான காரியம்!

மூன்று பயண பொதிகளில் 72,700 அமெரிக்க டொலர்களை நூதன முறையில் மறைத்து வைத்து சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இரண்டு பேரை சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பைச் சேர்ந்த 50 வயதான அக்காவும், 40 வயதான தம்பியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூர் செல்விருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.