முப்­ப­டை­க­ளின் அணி­வ­குப்­பு­டன் மைத்திரி நாளை நாடா­ளு­மன்­றம் செல்லவுள்ளார்!

ஜனாதிபதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் கடந்த மாதம் முடக்­கப்­பட்ட 8 ஆவது நாடா­ளு­மன்­றத்­தின் இரண்­டா­வது கூட்­டத்­தொ­டர் மீண்­டும் நாளை 8ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.
நாளை பிற்­ப­கல் 2.30 மணி­ய­ள­வில் நாடா­ளு­மன்­றத்­தின் புதிய கூட்­டத்­தொ­டரை ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆரம்­பித்­து­வைத்து அர­சின் கொள்கை விளக்­க­வு­ரையை நிகழ்த்­து­வார்.
புதிய நாடா­ளு­மன்­றம் ஆரம்­பிக்­கப்­ப­டும்­போது அரச தலை­வ­ருக்கு 21 பீரங்­கிக் குண்­டு­கள் முழங்க அணி­வ­குப்பு மரி­யாதை நாடா­ளு­மன்ற வீதி­யில் அளிக்­கப்­பட்டு, சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான நிகழ்­வு­கள் இடம்­பெ­றும்.
நாடா­ளு­மன்­றத்­தில் பார்­வை­யா­ளர் கலரி மூடப்­பட்டு, தெரி­வு­செய்­யப்­பட்ட வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­கள், தூது­வர்­கள் மற்­றும் விசேட பிர­மு­கர்­கள் மாத்­தி­ரம் இந்த ஆரம்ப நிகழ்­வுக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள்.
ஆரம்ப தினத்­தன்று ஜனாதிபதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன சபா­நா­ய­க­ரின் ஆச­னத்­தில் அமர்ந்து அர­சின் கொள்கை விளக்­க­வு­ரையை நிகழ்த்­து­வார்.
ஜனாதிபதியின்  கொள்கை விளக்­க­வுரை மீதான விவா­தம் 10ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை காலை 10 மணி­மு­தல் மாலை 6 மணி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

No comments

Powered by Blogger.