மீண்டும் மகிந்­த­வு­டன் இணை­யும் கருணா!

கருணா என அழைக்­கப்­ப­டும் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­த­ரன் தலை­மை­யி­லான தமி­ழர் ஐக்­கிய சுதந்­திர முன்­னணி எதிர்­கா­லத்­தில் மகிந்த அணி­யு­டன் இணைந்து பய­ணிக்­க­வுள்­ளது என்று கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் வி.கம­ல­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.
மட்­டக்­க­ளப்பு கல்­ல­டி­யி­லுள்ள தனி­யார் விடு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.அவர் தெரி­வித்­தா­வது,
-எதிர்­வ­ரும் மாகாண சபைத் தேர்­த­லுக்­கான தேர்­தல் தொகு­தி­கள் கடந்த ஏப்­ரல் 30ஆம் திகதி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆறு தொகு­தி­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளது.
75 வீத­மான தமி­ழர்­க­ளைக்­கொண்ட மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தில் நான்கு தமிழ் உறுப்­பி­னர்­க­ளை­யும், 25 வீதம் கொண்ட முஸ்­லிம்­க­ளுக்கு இரண்டு பிர­தி­நி­தி­க­ளை­யும் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய முறை­யில் தொகுதி பிரிப்பு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
அதை ஓர் அபாய எச்­ச­ரிக்­கை­யா­கவே நாங்­கள் பார்க்­கின்­றோம். தேசிய அர­சில் மகிந்த தலை­மை­யி­லான பொது­ஜன பெர­மு­ன­வு­டன் இணைந்து பய­ணிப்­ப­தற்­கான முதல்­கட்ட பேச்சை மேற்­கொண்­டுள்­ளோம்.
இதன்­போது வெற்­றி­க­ர­மான உடன்­ப­டிக்­கை­யொன்­றை­யும் செய்­துள்­ளோம். இதன்­கீழ் ஏரா­ள­மான தமிழ் இளை­ஞர்­களை எமது கட்­சி­யு­டன் இணைத்து அர­சி­யல் பாச­றை­களை நடத்தி கட்சி செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டுத்­த­வுள்­ளோம்.- என்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.