இலங்கையில் முகநூல் மோசடிகள் தொடர்பில் அவதானம்!

பேஸ்புக் மூலம் 20 இலட்சத்துக்கும் அதிகமான பணமோசடி இடம்பெற்றுள்ளதாக இலங்கை கணினி தகவல் அவசர பதிவுத்தளம் தெரிவித்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு, முகநூல் பாவனை செய்பவர்கள் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரோசான் சந்திரகுப்த அறிவித்துள்ளார்.

குறிப்பாக, பேஸ்புக்கில் நண்பர்களாகி ஒரு சில மாதங்களில் பிரத்தியேக குறுந்தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடும் சிலர் இவ்வாறான நூதனக் கொள்ளையில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

வௌிநாட்டில் தாம் வசிப்பதாகக் கூறி இலங்கையிலுள்ளவர்களுக்கு பரிசுப்பொதிகளை அனுப்புவதாகவும் அதற்கான பற்றுச்சீட்டுக்களுக்கான மாதிரிகளும் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்த அவர், அந்த பரிசுகளை பின்னர் சுங்கப் பிரிவினூடாகப் பெற்றுக்கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என கூறி மோசடியில் ஈடுபடுவதாகவும் கூறினார்.

இவ்வாறு கடந்த காலங்களில் பல முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கபெறுள்ளதாகவும், இது தொடர்பில் பாவனையாளர்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.