பிரான்ஸ்முக்கிய ஆய்வு இலங்கையில்!

இலங்கையில் கனிய எண்ணெய்க்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள பிரான்ஸ் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமொன்று உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கையின் கிழக்குக் கரையோரப் பிரதேசத்திலேயே இந்த ஆய்வுகளை மேற்கொள்ள குறித்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பெற்றொலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி செயலகத்தின் இயக்குநர் வஜிர தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த உடன்படிக்கைக்கு அமைய முதல் 2 வருடத்திற்குள் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியில் ஆய்வுப்பணிகள் இடம்பெறவுள்ளதோடு, இந்த ஆய்வுக்காக 2.5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.