மருத்துவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வங்கியில் கடன் பெற்ற நபர் கைது!

மருத்துவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வங்கியில் கடன் பெற்ற நபரரொருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கம்பஹா- உடுகம்பொல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.     அவர் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் இவ்வாறு மோசடியான முறையில் கடனாக பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

 56 வயதுடைய குறித்த சந்தேகநபர் கம்பஹா - பென்டியமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.  சந்தேகநபரிடம் இருந்து பல்வேறு பெயருடன் கூடிய 4 போலியான அடையாள அட்டைகள் , 2 சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் 11 கடவுச்சீட்டுக்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.Powered by Blogger.