புதிய களனி பாலத்தின் மீதான போக்குவரத்து இடைக்கிடை தடைப்படலாம்!

புதிய களனி பாலத்தில் போக்குவரத்துக்கு தடை ஏற்படலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
எதிர்வரும் 03ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரையான நாட்களில் புதிய களனி பாலத்தின் மீதான போக்குவரத்து இடைக்கிடை தடைப்படலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே அந்தப்பாதையிலான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதன் காரணமாக சாரதிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.