யாழ் திருக்குடும்ப கன்னியர் இறுதிக்குள் நுளைந்தது!

கீர்த்திகன் ஞாப­கார்த்­தக் கிண்­ணத்­துக் காக கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில் பெண்­கள் பிரி­வில் திருக்­கு­டும்­பக் கன்­னி­யர் மட அணி இறு­திக்­குத் தகுதி பெற் றது.
கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யின் மைதானத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் திருக்­கு­டும்­பக் கன்­னி­யர் மட அணியை எதிர்த்து உடு­வில் மக­ளில் கல்­லூரி அணி மோதி­ யது.

நான்கு கால்­பா­தி­க­ளைக் கொண்­ட­தாக ஆட்­டம் அமைந்­தது.

முத­லா­வது கால்­பா­தியை 12:03 என்ற புள்­ளி­ க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி சிறப்­பான ஆரம்­பம் கண்­டது உடு­வில் மக­ளிர் கல்­லூரி அணி.

அதன் பின்­னர் ஆட்­டம் அப்­ப­டியே மாறி­யது. திருக் கு­டும்­பக் கன்­னி­யர் மட அணி அடுத்த மூன்று கால்­பா­தி­க­ளை­யும் முறையே 12:06, 14:09, 15:14 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி முடி­வில் 44:41 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று இறு­திக்­குத் தகுதி பெற்­றது.

No comments

Powered by Blogger.