அடுத்த வாரம் முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து பஸ் கட்டணத்தை 10 வீதம் அதிகரிக்க இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நேற்று தீர்மானித்தது.
இதற்கமைய, ஆகக்குறைந்த கட்டணமான 10 ரூபாவை அதிகரிக்க நேற்று தீர்மானித்ததாக சங்கத்தின் தலைவர், கெமுனு விஜேரட்ண தெரிவித்தார். இதன்படி அடுத்த வாரம் முதல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நேற்று கூடிய தனியார் பஸ் உரிமையாளர்களால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
Powered by Blogger.