சமுர்த்தி திட்டம் தொடர்பில் கே. டி. எஸ். றுவன் சந்திர தலைமையில் விசேட குழு!

சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி திட்டம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து சிபாரிசுகளுடன் கூடிய விஷேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ். றுவன் சந்திர தலைமையில் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.
இக் குழுவில் திறைசேறியின் பிரதிச் செயலாளர் ஏ. ஆர். தேசப்பிரிய, இலங்கை மத்திய வங்கி பிரதி ஆளுநர் கே. டி. ரணசிங்க ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடலின்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த விஷேட குழுவை நியமித்துள்ளார்.
Powered by Blogger.