வடகொரியா மற்றும் தென்கொரியா இடையிலான அணுசக்தி தொடர்பான அறிவிப்பு!

வடகொரியா மற்றும் தென்கொரியா இடையிலான அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தின் விளைவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேசங்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அணுவாயுத சோதனையை விடாப்பிடியாக மேற்கொண்டு வந்த வடகொரியா தற்போது அணுவாயுத தளங்களை மூடுவதற்கான தீர்மானங்களை எடுத்துள்ளது.

இதுவரை காலமும் பிற நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த வடகொரியா தற்போது அமைதியான போக்கை கடைபிடித்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக கொரிய தீப கற்பத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி வடகொரிய ஜனாதிபதி கிம் யொங் உன்னிற்கும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னுக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த பேச்சுக்களின் முடிவில் வடகொரியா அணுவாயுத நடவடிக்கைகளை கைவிடுவதற்கு இணங்கியிருந்தது.

இந்நிலையில் அணுசக்தி சோதனைத் தளங்களை அகற்றுவதற்கான விழா ஒன்று மே 23 அல்லது 25 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக கொரியா ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வடகொரியா வெளிவிவகார அமைச்சர் கூறும்போது, நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வடகொரியத் தொழிலாளர் கட்சியின் ஏழாவது மத்திய குழுவின் மூன்றாவது முழுமையான கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியாவின் குறித்த திட்டமானது மே 23 அல்லது 25 திகதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விழாவோடு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் முதற்கட்டமாக சோதனைத் தளத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காவலர்களை அகற்றிய பின்னர் அனைத்துக் கண்காணிப்பு வசதிகள், பாதுகாப்பு அலகுகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன். சோதனைத் தளத்தினை சுற்றியுள்ள பகுதிகள் மூடப்படும் எனவும் சோதனைத் தளத்தின் அனைத் சுரங்கங்களும் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படுமெனவும் குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.