இவ்வருடம் வைகாசி மாதத்தில் இரண்தடு அமாவாசைகள் வருகின்றது சுபகாரியங்கள் செய்யலாமா.??(வேதியன்)

ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகளோ அல்லது இரண்டு பௌர்ணமிகளோ வந்தால் அந்தமாதத்தினை சூனிய மாதம் எனவும் அதிதமாதம் எனவும் கொள்வது வழக்கம். இதனையே ஜோதிட நூல்கள் கூறுகின்றது.

அவ்வாறான ஓர் மாதமாக இந்த விளம்பிவருடத்தில் வருகின்ற இரண்டு அமாவாசைகள் வருகின்றது. இரண்டு அமாவாசை வருவதனால் சுபகாரியங்கள் செய்யலாமா என்கின்ற பிரச்சினை மக்கள் மத்தியில் உள்ளது. அதனைத் தீர்க்க வேண்டிய கடமைகள் துறை சார்ந்தவர்களிடமும் குருமார்களிடமும் உள்ளது.

வாக்கியம் திருக்கணிதம் இந்த இரண்டு பஞ்சாங்கங்களும் முகூர்த்த நாட்களை வைகாசி மாதத்தில் போடவில்லை என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
அனைத்து முகூர்த்த நிர்ணயங்களுக்கும் பஞ்சாங்கத்தினைப் பார்க்கின்ற நாங்கள் ஆதாரம் காட்டும் நாங்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகமம் வேறு பஞ்சாங்கம் வேறு ஆனாலும் பஞ்சாங்க நிர்ணயத்தினை அடிப்படையாக வைத்தே ஆகமகிரிகைகளை நாம் கைக்கொள்கின்றோம்.

வசந்த காலத்தில் வருகின்ற இந்த மாதிரியான இரண்டு அமாவாசையோ இரண்டு பௌர்ணமியோ வருகின்ற போது அதற்கு குற்றமில்லை என்று காலவிதானத்தில் குறிப்பிடப்படுகின்றது. அதாவது சித்திரை வைகாசி மாதங்கள் வசந்தருது என அழைக்கப்படுவதனால் அக்காலத்தே சுப காரியங்கள் செய்யலாம் எனக் கூறுகிறது. என்பதனையும் கருத்தில் கொள்ளல் வேண்டும்.

காலதேசவர்தமானத்தினை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் எல்லோரினது ஏகமனதான தீர்மானமாக இக்காலத்தே சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்று முடிவுகள் உள்ளதனால் இவ்வாறான சுபகாரியங்களைத் தவிர்த்தல் நன்று.

வாக்கியம் 82 ம் பக்கம் மிகத் தெளிவாக கூறுகிறது. முகூர்த்தமும் போடப்படவில்லை.

திருக்கணிதம் 80 ம் பக்கம் அதிகமாதம் சுபமுகூர்த்தங்கள் விலக்கப்பட்டுள்ளது என்றுள்ளது.
Powered by Blogger.