சமூக வலைதளங்களில் சமந்தாவுக்கு குவியும் பாராட்டு!

திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா, அவ்வப்போது கொடிய நோய்களின் பாதிப்புக்குள்ளான ஆதரவற்ற குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு உதவுவதற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன. 
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான ‘ரங்கஸ்தலம்’ தெலுங்கு படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. 
அடுத்ததாக நடிகையர் திலகம் மே 9-ஆம் தேதியும், இரும்புத்திரை மே 11-ஆம் தேதியும் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் ஜோடியாக சீமராஜா படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது சூப்பர் டீலக்ஸ், யு-டர்ன் ரீமேக்கில் நடித்து வருகிறார். 
சமந்தா சினிமா தவிர, மாடலிங், கடை திறப்பு விழாக்கள் உள்ளிட்டவற்றிலும் பங்கேற்று வருகிறார். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை தனது பிரத்யுஷா டிரெஸ்ட்டுக்கு வழங்குகிறார். இந்த பணத்தை கொண்டு பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். 
Powered by Blogger.