மிகுதியாகப் பகிரப்படும் நயன்.!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவிற்கும், விக்னேஷ் ஷிவனிற்கும் இடையே காதல் இருப்பது உலகம் அறிந்த விஷயம். இருப்பினும் வெளிப்படையாக அறிவிக்காமல், தங்கள் காதலை மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் விடுமுறை தினத்தை கழிக்க, இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படத்தை, விக்னேஷ் ஷிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில் ’குட் பை கோச்செல்லா ஸ்டேஜ் கோச். சிறப்பான தருணம். அற்புதமான இசை நிகழ்ச்சியை எனது நட்சத்திரத்துடன் கண்டு ரசித்தேன். சிறந்த அனுபவம். இதுபோன்ற நிகழ்வுகளை வாழ்வில் மறக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்திற்கு பின், புதிதாக எந்தப் படத்திற்கும் விக்னேஷ் ஷிவன் ஒப்பந்தம் ஆகவில்லை.
Good bye #Coachella #StageCoach had an amazing time ! Short musical journey… https://t.co/tzy6A99rxu
— Vignesh ShivN (@VigneshShivN)
’ஷே ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் சிரஞ்சீவி உடன் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் நடப்பாண்டில் ஏராளமான படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்க உள்ளார்.
இதற்கிடையில் நயன்தாரா நடிப்பில் உருவான ‘இமைக்கா நொடிகள்’, ‘கோலமாவு கோகிலா’ ஆகிய படங்களில் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன.
Powered by Blogger.