யாழில் காவல்துறை உதவியுடன் சட்டவிரோதமாக மணல் கடத்தல்!

மண்கும்பாண், அரியாலை, மணற்காடு உள்ளிட்ட இடங்களில் இடம்பெறும் சட்டவரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திய அரச புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் ஒழுக்கமான தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை எந்தவொரு காரணமுமின்றி அந்த அதிகாரி இடமாற்றம் வழங்கியுள்ளார்.

தீவகம் மண்கும்பாண் பகுதியில் யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த முன்னணி நிறுவனமொன்று சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளது.

அந்த நிறுவனத்தால் ஒரே இரவில் கடத்தப்படும் மணலின் பெறுமதி 8 இலட்சம் ரூபா என அரச புலனாய்வு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களால் உயர் மட்டத்துக்கு அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடத்தப்படும் மணலின் பெறுமதியில் நான்கில் ஒரு பகுதி பொலிஸ் உயர்மட்டத்துக்கு கையூட்டாக வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மண்கும்பாணில் மணல் கடத்தலை முறியடிக்க சம்பந்தப்பட்ட பகுதியில் பதுங்கியிருந்து மணல் ரிப்பர்களை கைப்பற்றிய அரச புலனாய்வுப் பிரிவு தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரகளை எந்தவொரு காரணமுமின்றி பொலிஸ் உயர் அதிகாரி இடமாற்றம் வழங்கியுள்ளார்.

அத்துடன், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மணல் ரிப்பர்களை வழிமறித்துச் சோதனையிடவேண்டாம் எனவும் அந்த அதிகாரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
Powered by Blogger.