28 வருடங்களின் பின்னர் மரத்தின் கீழ் அமர்ந்து சேவையாற்றும் கிராமசேவகர்!

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 28 வருடங்களின் பின்னர் அண்மையில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் கிராமசே வகர் ஒருவர் மக்களுக்கு சேவையாற்றி வருவது அனைவரினதும் கவனத்தையீர்த்துள்ளது.
1990ம் ஆண்டு வலி,வடக்கு பகுதியிலிருந்து மக்கள் தமது பெறுமதியான வீடுகள், நிலங்கள், சொத்துக்களை இழந்த நிலையில் வெளியேற்றப்பட்டார்கள். பின்னர் 28 வருடங்கள் மக்கள் தமது சொந்த நிலங்களில் வாழாமல் உறவினர் நண்பர்கள் வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.
மக்களுடைய வீடுகள் இடிக்கப்பட்டு காடுகளாக மாறியிருக்கும் ஒரு பகுதி நிலம் அண்மையில் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் மீள வழங்கப்பட்டது. அங்கு மீள்குடியேறி வரும் மக்களுக்காக அரசாங்க ஊழியர்கள் சேவை யாற்றி வருகின்றனர். இவ்வாறு ஜே.240 கிராமசேவகர் பிரிவு தென்மயிலை கிராமத்தின்
கிராமசேவர் மழைக்கும் கூட ஒதுங்க ஒரு கட்டிடம் இல்லாத நிலையில், அலரி மரம் ஒன்றுக்கு கீழே ஒரு பிளா ஸ்டிக் மேசை மற்றும் 3 பிளாஸ்டிக் கதிரைகளை போட்டு அதிலிருந்து 28 வருடங்களுக்கு பின் சொந்த நிலத்தில் ஆவலுடன் குடியேறிவரும் மக்களுக்கு திறம்பட சேவையாற்றி வருகிறார்.

மக்களை சந்திப்பதற்கு வாகனம் வேண்டும், அலுவலக கட்டிடம் வேண்டும் தளபாடங்கள் வேண்டும் என கேட்கும் அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் உள்ள வடமாகாணத்தில் இப்படியான அரச அதிகாரியின் சேவையை பலரும் வியந்து பார்ப்பதுடன் பாராட்டியும் வருகின்றார்கள்.

Powered by Blogger.