மன்னார் மறை மாவட்ட அருட்பணியாளர்களுக்கு புதிய பொறுப்புக்கள்!

மன்னார் மறை மாவட்டத்தின் ஆயராக பேரருட்கலாநிதி .இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை பொறுப்பேற்றுள்ளதை அடுத்து, மன்னார் மறை மாவட்ட அருட்பணியாளர்களுக்கு முதலாவது பணி மாற்ற ஒழுங்கமைப்பு நேற்று நடைபெற்றது.

 மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆயர் இல்லச் சிற்றாலயத்தில் இறை வேண்டுதல் வழிபாடுகள் நடைபெற்றதை அடுத்து, பணிகளின் இலக்கு, பணியின் தன்மை, கிறிஸ்துவின் எடுத்துக்காட்டுக்களை மையமாகக் கொண்ட பணிவாழ்வு ஆகியவை விளக்கமளிக்கப்பட்டது.

 அதனைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையின் திருமரபின் ஒழுக்க, சட்ட பரிந்துரை மற்றும் பணிப்புரைகளுக்கு அமைவாக மன்னார் மறை மாவட்ட அருட்பணியாளர்களுக்கும், மன்னார் மறை மாவட்டத்தில் பணிபுரிய வந்துள்ள துறவற சபைகளின் அருட்பணியாளர்களுக்குமான புதிய பணிப் பொறுப்புக்களை உள்ளடக்கிய பணிநிலை நியமனங்கள் அறிவிக்கப்பட்டது.
Powered by Blogger.