தென்­ம­ராட்­சிப் பிர­தேச சந்­தை­க­ளில் தேங்­காய் விலை வீழ்ச்­சி!

உச்­சத்­தைத் தொட்­டி­ருந்த தேங்­காய் விலை தென்­ம­ராட்­சிப் பிர­தேச
சந்­தை­க­ளில் கடந்த சில தினங்­க­ளாக வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளன.

 தேங்­காய்­க­ளின் உற்­பத்தி அதி­க­ரித்­துள்­ளது. எனவே அதி­க­ள­வான தேங்­காய்­கள் சந்­தைக்­குக் கொண்டு வரப்­ப­டு­கின்­றன. இத­னால் கடந்த சில தினங்­க­ளாக அவற்­றின் விலை­யில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது என்று வியா­பா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

 கடந்த மாதங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் மே மாதத்­தில் தேங்­கா­யின் வரவு அதி­க­ரித்­துள்­ள­தால் 25 ரூபா வரை விலை வீழ்ச்சி காணப்­ப­டு­கி­றது. 60 ரூபா­வுக்கு மேல் விற்­பனை செய்­யப்­பட்ட தேங்­காய் ஒன்று தற்­போது 30 முதல் 55 ரூபாய் வரை பெற்­றுக் கொள்­ள­லாம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
Powered by Blogger.