கேப்பாபுலவு விமானப்படையினரின் காவலரணில் இருந்த துப்பாக்கி மாயம்!

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படையினரின் காவலரண் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஏ.கே. வகை துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ள நிலையில் அதனை தேடும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனா்.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்......
முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் அமைந்துள்ள விமானப்படையினர் விமான தளத்தினை சுற்றி பாரிய பகுதிகளில் காவலரண்கள் அமைத்துள்ளார்கள்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம்(06.05.2018) ஞாயிற்றுகிழமை காவலரண் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவம் குறித்து விமான படையினர் தேடுதல் நடத்தி பலனளிக்காத நிலையில் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனா்.
இதேவேளை நேற்றையதினம்(07.05.2018) பொலீஸார் மற்றும் படை பொலீஸார், படையினர், விமானப்படையினர் என பெருமளவான படையினர்கள் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த தேடுதல் நடவடிக்கை அருகில் உள்ள காட்டுப்பகுதிகளில் மற்றும் வாவெட்டிகுளம், நந்திக்குளம்,போன்ற பகுதிகளிலும் தொடர்சியான முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.