தகுதியானவர்கள் பலர் உள்வாங்கப்படவில்லை!

கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள தொண்டராசிரியர்களின் பெயர் பட்டியலில் தகுதியுள்ள பலர் உள்வாங்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

 இந்நியமனங்கள் தொடர்பாக இன்று(13) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், யுத்தகாலங்களில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் கற்பித்த நியமனத்துக்கு தகுதிகளை கொண்ட பலர் இந்த பட்டியலில் உள்வாங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.

 ஆகவே யாருக்கும் அநீதி ஏற்படாவண்ணம் தகுதி உள்ளவர்களை தெரிவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன் விரைவில் கலந்துரையாடவுள்ளேன்.

 இதற்கு முன் தகுதியுள்ள பலருக்கு நேர்முகத்தேர்வுக்கு கடிதம் அனுப்பப்படாத சந்தர்ப்பத்தில் கல்வி அமைச்சரிடம் நான் விடுத்த வேண்டுகோளுக்கமைய கடிதம் அனுப்பப்படாதவர்களும் நேர்முகத்தேர்வுக்கு தோற்றும் சந்தர்ப்பம் வழங்கப்படிருந்தது.

 மேலும் வெளியிடப்பட்டுள்ள பெயர் விபரங்களின் வெளிப்படைதன்மை பற்றியும் தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பாகவும் ஆராயப்படும் என தெரிவித்தார்



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.