நாளை வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளில் துக்­க­தி­னம்!

வடக்கு மாகா­ணத்­தின் அனைத்­துப் பாட­சா­லை­க­ளும் நாளை வெள்­ளிக்­கி­ழமை, வடக்கு மாகாண சபை­யின் கொடி­யை அரைக் கம்­பத்­தில் பறக்­க­வி­டு­மா­றும் அன்று காலை பதி­னொரு மணிக்கு அனைத்து பாட­சா­லை­க­ளி­லும் அனை­வ­ரும் அக­வ­ணக்­கம் செலுத்­து­மா­றும் அனைத்து அதி­பர்­க­ளை­யும் கேட்­டுக்­கொள் வ­தாக, வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.
இது தொடர்­பில் அவர் அனுப்பி வைத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
கடந்த 70ஆண்­டு­கால எமது தேசிய இனத்­தின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக அகிம்சை வழி­யி­லும் பின்­னர் ஆயுத ரீதி­யி­லும் நாம் போராடி வந்­துள்­ளோம். எமது ஆயு­தப் போராட்­டம் பயங்­க­ர­வா­த­மா­கச் சித்­தி­ரிக்­கப்­பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி பன்­னாட்­டுச் சமூ­கத்­தைப் பிழை­யாக வழி­ந­டத்தி மௌனிக்­கச் செய்­யப்­பட்­டது.
கடந்த முப்­ப­தாண்டு போராட்­டத்­தில் நாம் ஏரா­ள­மான இளை­யோர் உள்­ளிட்ட லட்­சக்­க­ணக்­கான உயிர்­களை களப்­பலி கொடுத்­துள்­ளோம். இறு­தி­யாக எம்­மக்­கள்­மீது நடை­பெற்ற தாக்­கு­த­லில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உயிர்­களை இழந்­துள்­ள­து­டன் பல்­லா­யி­ரக் கணக்­க­னக்­கா­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை அறிந்­து­கொள்ள முடி­யாத நிலை­யில் உள்­ளோம்.
எமது இனத்­தின் உரி­மைக் குர­லுக்­கான போராட்­டம் இன்­ன­மும் முற்­றுப்­பெ­ற­வில்லை என்­ப­தை­யும், மடிந்­து­போன எமது உற­வு­க­ளுக்­கும் காணா­மல் ஆக்­கப்­பட்ட உற­வு­க­ளுக்­கும் இன்­ன­மும் நீதி வழங்­கப்­ப­ட­வில்லை என்­ப­தை­யும் பன்­னாட்­டுச் சமூ­கத்­திற்கு அழுத்­த­மாக எடுத்­து­ரைக்க வேண்­டி­யுள்­ளது.
எமது உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான வேள்­வி­யில் ஆகு­தி­யா­ன­வர்­களை உணர்­வு­டன் நினை­வு­கூர வேண்­டி­யது எம்­மி­னத்­தின் 
கட­மை­யாகும்   என்­றுள்­ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.