இரணைதீவில் தொப்பி போட சென்ற கூத்தமைப்பு!

 இரணைதீவு மக்கள் கடந்த 23.04.2018 அன்று கடற்படையின் தடையையும் மீறி தாமாகவே அங்கு சென்று குடியமர்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் அதற்கமைவாக இன்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா,சிவஞானம் சிறிதரன்,சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள்,நகர பிரதேச சபை உறுப்பினர்கள்,Fish a Man Friend நிறுவனத்தின் ஸ்தாபகர் சங்கர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் இரணைதீவு மக்களை சந்தித்தனர்.
இவ் மக்கள் தற்போது தமது காணிகளை துப்பரவு செய்து வருகின்றனர் தாம் இரணைதீவில் நிரந்தரமாக வசிப்பதற்குரிய எந்தவிதமான அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாக இங்கு வந்த பாரளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் கோரிக்கை வைத்ததுடன் தங்களால் உடனடியாக மக்களுக்கு செய்யகூடிய உதவிகளைபுரியுமாறும் வேண்டினர்.
அடிப்படை வசதிகளான குடிநீர்,உணவு,தற்காலிக கொட்டகைகள் மிகவும் முக்கியமாக தேவைப்படுகின்றது குறிப்பிடத்தகதாகும்.

மக்களுக்கு தேவையான உணவுபொருட்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பானது கடந்த காலங்களிலும் சரி எப்போதும் இரணைதீவு மக்களுக்காக பல இடங்களிலும் குரல் கொடுத்து வருகின்றதுடன் மக்களின் போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளோம்.உடனடியாக நீர் வசதி,கிடுகுகள் என்பன வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் பிரதேச சபைக்கு ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இரணைதீவு மக்கள் கடந்த 23.04.2018 அன்று கடற்படையின் தடையையும் மீறி தாமாகவே அங்கு சென்று குடியமர்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள  இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்காளன தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,சிவஞானம் சிறிதரன்(யாழ் பாராளுமன்ற உறுப்பினர்),சாள்ஸ் நிர்மலநாதன்(வன்னி பாராளுமன்ற உற

No comments

Powered by Blogger.