சீ.வி.கே.சிவஞானம் கூறிய கருத்துக்கு தவநாதன் கடும் எதிர்ப்பு!

வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றமற்றவர். அவர் மீது சபையில் எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் கடுமையான எதிர்ப்பினை காட்டியிருக்கின்றார்.

வடமாகாண சபையின் 122வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது 120 அமர்வில் முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதில் வழங்கியிருந்தார்.

முதலமைச்சர் தனது பதிலில்,

சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராக இருந்து பதவி விலகும்போது 750 அமைச்சு சார்ந்த கோவைகளை எடுத்து சென்றதாக அறிந்தேன். பின்னர் அந்த கோவைகள் மீள கொண்டுவந்து வைக்கப்பட்டதாகவும் அறிந்தேன்.

அதனடிப்படையிலேயே ஊடகங்களுக்கு கருத்து கூறியிருந்தேன். ஆனால் ஊடகங்கள் கோவையை சத்தியலிங்கம் எடுத்து சென்றார் என செய்தியை பிரசுரித்தன. கோவைகள் திரும்பி வந்துவிட்டன என செய்தியை பிரசுரிக்கவில்லை. ஆகவே ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து பேசிய பயனில்லை என்றார்.

இதனையடுத்து சபையில் கருத்து தெரிவித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,

முன்னாள் அமைச்சர் ப.சத்தி யலிங்கம் குற்றமற்றவர். அவர் மீது சபையில் எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இல்லை என கூறினார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன், சத்தியலிங்கம் சுகாதார அமைச்சு சார்ந்த கோவைகளை எடுத்து சென்றதாக முதலமைச்சர் கூறினார். பின்னர் அந் த கோவைகள் திரும்பிவிட்டதாகவும் கூறினார். ஆகவே ஒரு அமைச்சு சார்ந்த கோவைகளை அமைச்சர் பதவி விலகும் போது எடுத்து செல்வது குற்றம் இல்லையா?

மேலும் சத்தியலிங்கம் குற்றமற்றவர் என்றால் மிகுதி 3 அமைச்சர்கள் குற்றவாளிகளா? சுற்றவாளிகளா? என கேள்வி எழுப்பினார். ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர் வி.தவநாதனின் கேள்விக்கு இறுதிவரை சரியான பதில் கொடுக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.