விஜய்யின் பதிலுக்காக காத்திருக்கும் முன்னணி இயக்குநர்!

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி, ராதா ரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றார் போல் அவ்வப்போது விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர் யார் என்பது குறித்தும் செய்திகள் வெளியாகி வருகின்றன. 
அந்த வகையில் விஜய்யின் அடுத்த படத்தை மோகன் ராஜா இயக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இயக்குநர் ஏ.எல்.விஜய், நடிகர் விஜய்யின் சம்மதத்துக்காக காத்திருப்பதாக கூறியிருக்கிறார். 
இயக்குனர் விஜய் இயக்கத்தில் 2013-ல் வெளியான படம் ‘தலைவா’. விஜய்-அமலாபால் நடித்த இந்த படம் பல தடைகளை கடந்து திரைக்கு வந்தது. “தற்போது, ‘தலைவா-2’ படத்துக்கு கதை தயாராக இருக்கிறது. விஜய்க்கும் இது தெரியும். அவர் ‘ஓ.கே’ சொன்னால் படத்தை ஆரம்பித்து விடுவேன்” என்று இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார்.
image
இவ்வாறாக விஜய்யின் அடுத்த படத்திற்கு முன்னணி இயக்குநர்களிடையே கடும் போட்டிய நிலவி வருகிறது. விஜய் அடுத்ததாக எந்த இயக்குநருடன் இணையப் போகிறார் என்பது விரைவில் தெரிய வரும். 
Powered by Blogger.