விவசாயத்துறையில் புதிய திட்டம்!

நாட்டின் விவசாயத்துறையில் புதிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விவசாயத்துறையில் வர்த்தகம் மற்றும் முகாமைத்துவத்துறையில் நவீனமயப்படுத்தும் நடவடிக்கை இதன் கீழ் இடம்பெறுவதாக மாகாண பிரதி திட்டப் பணிப்பாளர் எம்.பி.திசாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது மூன்று நோக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. உற்பத்தித் தரத்தை மேம்படுத்துதல், பெறுமதி சேர்த்தல் மூலம் விவசாயிகள் பொருளாதார நிலைமையை மேம்படுத்துதல் மற்றும் வர்த்தகத்திற்கான சந்தர்ப்பத்தை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.

மொத்த விவசாயத்துறையை உள்ளடக்கிய வகையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவதுடன், சிறிய அளவிலான விவசாய உற்பத்திகளை விரிவுபடுத்தலுக்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றதென்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாகாணங்களில் ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக விவசாயத்துறையின் நவீனமயப்படுத்தல் திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் மதிப்பீடுகளை மேற்கொள்ளும் விசேட துறை நிபுணர் திருமதி ராதிகா மெலவதந்திரி தெரிவித்தார்.

எதிர்வரும் ஐந்து வருடங்களில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக நிதியும் வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
Powered by Blogger.