நீரில் மூழ்கி பாடசாலை மாணவர் பலி

அகுரெஸ்ஸ - அதுரலிய - கதனாவல கங்கையில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
அதுரலிய கல்லூரியில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவரே நண்பர்களுடன் கங்கையிற்கு நீராடச் சென்றிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில், குறித்த பிரதேச மக்கள் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் பின்னர் மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.