நேருக்கு நேர் மோதும் தமிழர்கள்.!

பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
இதுவரை 11 போட்டிகளில் ஆடி 5ல் வெற்றியுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ள கொல்கத்தா அணி, புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது. எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப்புடன் கொல்கத்தா அணி ஆடிவருகிறது. தமிழக வீரர்களை கேப்டனாக இரு அணிகள், வெற்றி கட்டாயத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்தூர் மைதானத்தில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். 
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின் மற்றும் நரைன் ஆடிவருகின்றனர். இந்த சீசனில் இரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடந்த போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  
Powered by Blogger.