மனைவியை கொலை செய்த கணவர்!


வெயாங்கொட, கட்டுவஸ்கொட பிரதேசத்தில் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துள்ளார். 

இருவரிடையே ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலானைதையடுத்து உடற்பயிற்சிக்கு பயன்படுத்தும் உபகரணம் ஒன்றினால் மனைவி மீது தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தாக்குதலில் காயமடைந்த மனைவி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது உயிரிழந்துள்ளார். 

27 வயதுடைய கட்டுவஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனை இடம்பெற உள்ளது. 

கொலை தொடர்பில் குறித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெயாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Powered by Blogger.