பதுளை மாவட்ட மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்!

சீரற்ற காலநிலை பதுளை மாவட்ட வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று தேசிய இடர்முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவித்துள்ளார்

எதிர்வரும் தினங்களில் நாட்டிலும், நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் மழை அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

விசேடமாக, மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களின் சில ,டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இந்த நிலைக்கு மத்தியில், பதுளை மாவட்ட மலைசாரலில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென தேசிய இடர்முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவித்துள்ளார்.

இதே வேளை பஸ்ஸர – கனவரெல்ல பகுதியில் பெய்த அடை மழை காரணமாக அப்பகுதியில் உள்ள மண்மேடு சரிவதற்கு ஆரம்பித்துள்ளது.இந்த மண்சரிவினால் 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்இ ஒரு குடும்பத்தை அப்பகுதியில் இருந்து அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஏனைய 14 குடும்பங்களையும் அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம் உதய குமார தெரிவித்துள்ளார்.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.