உருளைக்கிழங்கு, வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கு குழு!

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சின் அதிகாரிகள் குழுவில் இடம்பெறுகிறார்கள். இலங்கையில் உருளைக்கிழங்கு, வெங்காய உற்பத்தி என்பனவற்றில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பாதுகாப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிப்பது காலத்தின் தேவை என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

மாத்தளை, யாழ்ப்பாணம், புத்தளம் போன்ற இடங்களில் வெங்காயம் பயிரிடப்படுவதோடு, பண்டாரவளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்காமையினால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள். வெங்காயம், உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களை வியாபாரிகளின் சுரண்டலிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். அறுவடைக் காலங்களில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயம் என்பனவற்றின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதோ, வரியை அதிகரிப்பதோ அவசியமாகும் என்றும் விவசாய அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.