யாழ்.மாநகரசபைபில் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அட்டகாசம்??

யாழ்.மாநகரசபை அமர்வில் உட்கார்ந்தபடி உரையாற்றிய முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ் வரி பற்குணராசாவை மாநகரசபையின் மாண்பை மதிக்கும் வகையில் சபையில் எழுந்து நின்று பேசுமாறு யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆணோல்ட் கூறியுள்ளார். 
யாழ்.மாநகரசபையின் 2ம் அமர்வு இன்று நடைபெற்றது. இதன்போது சென்றகூட்டறிக்கை சபைக்கு சமர்பிக்கப் பட்டது. அதில் தாம் பேசிய சில விடயங்கள் உள்ளடக்கவில்லை என ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட் டியிருந்தார். 
அதனை ஆதரித்து பேசிய முன்னாள் யாழ்.மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்றுகுணராசா சபையில் தனது ஆசனத்தில் உட்கார்ந்திருந்தபடி கருத்துக்களை கூறினார். இதனை கண்டித்த மாநகரசபை மேயர் சபை யின் மாண்பை மதிக்கும்படி கேட்டதுடன், சபையில் எழுந்து நின்று பேசுமாறும் கேட்டார்
இதன்று பதிலளித்த முன்னாள் மேயர் தமக்கு காலில் சத்திரசிகி க்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் நீண்டநேரம் எழுந்து நின்று பேச இயலாது எனவும் கூறியதுடன், அதற்கான மருத்துவ அறிக்கையை சபைக்கு சமர்பிக்க முடியும் எனவும் கூறினார். ஆனாலும் சபைக்கு மருத்துவ அறிக்கையை சமர்பிக்காமல், மேயரின் அனுமதியை பெறாமல் முன்னாள் மேயர் தொடர்ந்தும் தமது ஆசனத்தில் உட்கார்ந்திருந்தபடி கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தமையினை அவதானிக்க கூடியதாக இருந்தது. 
இந்நிலையில் முன்னாள் மேயரின் செயற்பாடு பிழை என சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து அடுத்த கூட்டத் தில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதற்கான மருத்துவ அறிக்கையை சமர்பிப்பதாக கூறினார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.