கடற்றொழிலாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை!

கடற்றொழிலாளர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று புதிய கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சில் தமது கடமைகளை இன்று (வியாழக்கிழமை) உத்தியோபூர்வமாக ஆரம்பித்தபோதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
உரிய நடைமுறைக்கு அமைவாக சமுத்திரத்தில் மீன் வளத்தை அறுவடை செய்து அதன் பயன்கள் பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும். பொதுமக்களுக்கு நியாயமான முறையில் மீனை வழங்குவதற்கான திட்டம் விரிவுபடுத்தப்படும்.
கடற்றொழில் துறைக்கான சட்ட திட்டங்கள் வலுவூட்டப்படும் என்றும் அமைச்சர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
Powered by Blogger.