எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் விவாதிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்!

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் கோரியுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

 நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வைத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

  மாகாண சபைகள் எல்லை நீர்ணய அறிக்கை தொடர்பான விவாதத்தை வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளுமாறு தாங்கள் கோரிக்கை விடுத்ததாகவும் எனினும் அதுகுறித்து இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றும் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டார்.
Powered by Blogger.