முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பொது அமைப்­புக்­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் சுயா­தீ­னக் குழு!

தமி­ழர் இன அழிப்­பின் அடை­யா­ள­மான முள்­ளி வாய்க்­கா­லின் 10ஆம் ஆண்டு நினை­வேந்­தல் நாள் அடுத்த ஆண்டு பேரெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­ப­டும். வடக்கு மாகாண அரசு இல்­லா­வி­டி­னும் நினை­வேந்­தலை தொடர்ந்து நடத்­து­வ­தற்­காக பொது அமைப்­புக்­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் சுயா­தீ­னக் குழு நிறு­வப்­ப­டும்.
இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்று அறி­வித்­தார். முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை வடக்கு மாகாண சபை­யு­டன் இணைந்து கடைப்­பி­டிக்க ஆர்­வம் உள்ள பொது அமைப்­புக்­க­ளுக்­கும் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்­கும் இடை­யில் அவ­ரது அலு­வ­ல­கத்­தில் நேற்­றுச் சந்­திப்பு இடம்­பெற்­றது. சந்­திப்­பின் பின்­னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்­துக் கூறும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்தை கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக வடக்கு மாகாண சபையே ஒருங்­கி­ணைத்து வரு­கின்­றது. இந்த ஆண்­டும் நாமே ஒருங்­கி­ணைத்து நடாத்­தத் தீர்­மா­னித்து எம்­மு­டன் இணைந்து செயற்­பட ஆர்­வம் உள்ள பொது அமைப்­புக்­க­ளுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தேன். அந்த அழைப்பை ஏற்று வந்த பொது அமைப்­புக்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னோம். அதில் பல­ரும் பல­வா­றான கருத்­து­களை முன்­வைத்­த­னர்.
வடக்கு மாகாண சபை­யின் ஆயுள்­கா­லம் நடப்­பாண்­டு­டன் நிறை­வ­டை­ய­வுள்­ளது. அத்­து­டன் முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்­தின் பத்­தாண்டு நிறைவு அடுத்த ஆண்­டா­கும். அந்த நினைவு நாளை நாம் உணர்­வு­பூர்­வ­மாக பேரெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கத் தீர்­மா­னித்­துள்­ளோம். முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்தை ஆண்­டு­தோ­றும் ஒருங்­கி­ணைத்து நடாத்த அனைத்­துச் சமூக மட்ட அமைப்­புக்­க­ளை­யும் இணைத்­துக் குழுவை அமைக்­க­வுள்­ளோம் – என்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.