இலங்கையில் மின்சாரம் தடைப்படும் அபாயம்!

தற்போது மழையுடன் கூடிய காலநிலை காரணாக நாடு முழுவதும்
மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தாம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த மின்சார தடை, பொது மக்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் தற்போது 10 நாட்கள் கடந்துள்ள போதிலும், பொறுப்பு கூற வேண்டியவர்கள் இன்னமும் உரிய பதில் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில கோரிக்கைகளை முன்வைத்து தாம் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பொறுப்பு கூற வேண்டியவர்கள் அமைதியாக இருந்தால் பணி பகிஷ்கரிப்பும் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.