மோப்பநாய் கோரா உயிரிழப்பு!

அட்டன் பொலிஸ் வலயத்தின் மோப்பநாயான கோரா நேற்று செவ்வாய்க் கிழமை காலை உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
08 வயதினை கொண்ட கோரா கடந்த மூன்று வருடங்களாக அட்டன் பொலிஸ் வலயத்தில் சேவை புரிந்துள்ளதாகவும், சிவனொளிபாதமலை பருவகாலத்தின் போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட போதைப் பொருட்களை இனங்கண்டு சந்தேக நபர்களை கைது செய் வதற்கு உதவியமை குறிப்பிடத்தக்கது.
இந்த கோரா என்ற பொலிஸ் மோப்பநாய் மத்திய மாகாணத்தின் உள்ள மோப்பநாய்கள் பயிற்சி வழங்கும் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு பயிற்சி ஒன்றிற்காக அழைத்து செல்லப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோப்பநாய் அம்பாறை, மட்டக்களப்பு, பண்டாரவளை ஆகிய பொலிஸ் நிலைய பிரதேசங்களில் சேவைபுரிந்துள்ளது. இறுதியாக அட்டன் தலைமை பொலிஸ் நிலையத்தில் 3 வருடங்களாக சேவை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.