தங்க மயில் விருது திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது!

மறைந்த சிங்கள திரைப்படத்துறையின் பிரபல இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் தங்க மயில் என்ற கௌரவ விருது திருப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

 நேற்று(6) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது கலைஞர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸிற்கு 'கம்பெரலிய' என்ற திரைப்படத்திற்காக 1965 ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் வைத்து வழங்கப்பட்ட தங்க மயில் என்ற விருது அண்மையில் காணாமல் போனது.

 அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குறித்த பதக்கம் பொதுமக்களின் அஞ்சலிக்கு மத்தியில் மாயமாகியதாக குடும்பத்தினர் சார்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி வழி இலக்கம் 177  கடுவளை கொள்ளுப்பிட்டி வீதியில் பயணிக்கும் பேருந்தில் இருந்து குறித்த விருது மீட்கப்பட்டிருந்தது.

 இந்நிலையிலேயே சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Powered by Blogger.