கொலைச் சம்பவம் ஒன்றில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளிகளான மூன்று பேருக்கு காலி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

காலி மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

2003ம் ஆண்டு ஜனவரி மாதம் பூஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் குற்றவாளிகளுக்கு எதிராக காலி மேல் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்துள்ளது. 

மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.