சனிக்கிழமை முல்லையில் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் கூட்டம்!

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் அடுத்தக் கூட்டம் நாளை மறுதினம் (2) முல்லைத்தீவில் இடம்பெறும்.

இந்த நிகழ்வில் காணாமல் போனவர்களின் குடும்ப அங்கத்தவர்கள், அவர்களின் நலனுக்காக பாடுபடும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், செய்தியாளர்கள் ஆகியோரை ஆணைக்குழுவின் ஏழு ஆணையாளர்களும் சந்திப்பார்கள்.

இதில் எதிர்கால செயற்பாடுகள் பற்றியும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படவுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று, ஒட்டுச்சுட்டான், துணுக்காய், மாந்தை, மணலாறு பகுதிகளில் காணாமல் போனவர்களது நிலைமை பற்றி ஆராயப்படும்.

Powered by Blogger.